நடிகர் ரஜினிக்கு வாதாடத் தயார்.. சுவாமி ட்வீட்

பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசுகையில், 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால், சோ சார் மட்டும் துணிச்சலாக துக்ளக் பத்திரிகை அட்டையில் வெளியிட்டார். அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், சோ சார் அதை மீண்டும் அச்சடித்து விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.
ஆனால், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும், பொய் சொல்லும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

அதே சமயம், தான் சொன்னது கற்பனையானது அல்ல என்றும், இல்லாததை சொல்லாததால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினி பேட்டியளித்தார்.
இந்த சூழலில், வழக்கமாக ரஜினியை விமர்சித்து வரும் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி இன்று மாறியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்முறை ஒரு மாற்றத்திற்காக நான் ரஜினி பக்கம் இருக்கிறேன். பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில் ரஜினி சொன்னது சரிதான். துக்ளக்கில் சோ அந்த உண்மையை வெளியிட்டார்.

சினிமா நடிகர் ரஜினி தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் அவருக்கு நீதிமன்றத்தில் உதவத் தயாராக உள்ளேன்என்று கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!