பிப்.29ல் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்..

by எஸ். எம். கணபதி, Feb 23, 2020, 21:11 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்த கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக வரும் 29ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், பிப்.29ம் தேதியன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார். கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து நாடாளுமன்றத்தில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும், தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.


Leave a reply