13 ஆண்டுகளாக போலிஸுக்கு டிமிக்கி கொடுத்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

சேலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்த வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mar 1, 2018, 13:25 PM IST

சேலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்த வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், அழகாபுரம் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு மண்டல வளர் கல்வி வாரியம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அரசு அதிகாரியை போல சிகப்பு சுழல் விளக்கு பொருத்திய காரில் வலம் வந்துள்ளார்.

மேலும், ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து பேரூராட்சிகளில் ஒப்பந்த வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சமூக நல அலுவலர் சரஸ்வதி என்பவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் மத்திய குற்றபிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இதுதொடர்பான வழக்கில் விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விஜயகுமாரை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

You'r reading 13 ஆண்டுகளாக போலிஸுக்கு டிமிக்கி கொடுத்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை