சென்னையில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் பாதிப்பு 1596 ஆனது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனாவால் இது வரை 18 பேர் பலியாகியிருக்கின்றனர். 635 பேர் குணமடைந்துள்ளனர்.


சென்னையில் அதிகபட்சமாக 358 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 134, திருப்பூரில் 109, திண்டுக்கல் 76, ஈரோடு 70, திருநெல்வேலி 62, செங்கல்பட்டு 56, நாமக்கல் 51, திருச்சி 50 என்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 23 லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 6060 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை மொத்தம் 53,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு லட்சத்து 8357 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!