நோன்பு நாட்களில் மட்டும் அதிகாலை 3 மணிமுதல் 5 மணி வரை, இப்தார் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கத் தமிழக அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். அப்போது மசூதிகளில் சிறப்புத் தொழுகைகளும் நடைபெறும்.
அதே போன்று, நோன்புக் கஞ்சி தயாரிக்க 2011-ம் ஆண்டு முதல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பள்ளிவாசல்களுக்கு அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர், ரமலான் நோன்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்காக அரசு அளிக்கும் 5,450 மெட்ரிக் டன் பச்சரிசியை இஸ்லாமிய அமைப்பு மூலம் தமிழகமெங்கும் உரிய குடும்பங்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அரிசி விநியோகிக்கப்படும் எனவும், இந்த விநியோகம் இம்மாதம் 22ம் தேதிக்குள் தன்னார்வலர்கள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அரிசியை பல்வேறு பள்ளிவாசல்கள் ஏற்க மறுத்து அதனைத் திருப்பி அனுப்பியுள்ளனர். ரமலான் நோன்பு காலங்களில் அதிகாலையில் உணவு அருந்தி நாள் முழுவதும் உண்ணாமல் எச்சில் கூட முழுங்காமல் நோன்பு நோற்றி சூரியன் மறைந்த பிறகு நோன்பை திறக்கும் முறையை இந்த 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.
தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அரிசியை பல்வேறு பள்ளிவாசல்கள் ஏற்க மறுத்து அதனைத் திருப்பி அனுப்பியுள்ளனர். ரமலான் நோன்பு காலங்களில் அதிகாலையில் உணவு அருந்தி நாள் முழுவதும் உண்ணாமல் எச்சில் கூட முழுங்காமல் நோன்பு நோற்றி சூரியன் மறைந்த பிறகு நோன்பைத் திறக்கும் முறையை இந்த 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். வரும் 25-ம் தேதி முதல் ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கவுள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மாலை 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. நோன்பு காலம் தொடங்க உள்ளதால், இந்த நோன்பு நாட்களில் மட்டும் சஹர் நேரமான அதிகாலை 3 மணிமுதல் 5 மணி வரை, இப்தார் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கத் தமிழக அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இந்த உணவகங்களில் சமூக விலகலை முறையாகப் பின்பற்றி பார்சல் மட்டுமே வாங்கி செல்ல அனுமதி வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை அனைத்து இஸ்லாமிய மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.