தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே27) மட்டும் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிமாநிலங்களில் வந்த 117 பேர் அடக்கம். மகாராஷ்டிராவிலிருந்து வந்த 74 பேர், கர்நாடகா 20 பேர், பஞ்சாப் 8 பேர் மற்றும் டெல்லி, அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வந்த ஓரிருவருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 பேராக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 639 பேரையும் சேர்த்து மொத்தம் 10.548 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா தொற்று அதிமாக பரவி வருகிறது. தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.சென்னை தவிர, செங்கல்பட்டில் 45 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும், சேலத்தில் 7 பேருக்கும், மதுரையில் 8 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.