நடிகை அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்.. விராத்திடம் பா ஜ எம் எல் ஏ வலியுறுத்தல்..

by Chandru, May 29, 2020, 11:24 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து மணந்தார். தொடர்ந்து அனுஷ்கா சர்மா படங்களில் நடித்து வருவதுடன் வெப் சீரிஸும் தயாரிக்கிறார்.

தற்போது தயாரித்து வரும் வெப் சீரிஸ்பாதல் லோக். இந்த வெப் சீரிஸ் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது, இதில் நந்த்கிஷோர் குஜார் என்ற எம் எல் ஏ புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம் எல் ஏ ஆவார். தனது புகைப்படத்தை அனுமதி இல்லாமல் அனுஷ்கா சர்மா பயன்படுத்தியதாக அவர் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

மேலும் சாதி மோதலை தூண்டும் விதமாக அனுஷ்கா சர்மா வெப் சீரிஸ் படமாக்கப்படுகிறது. இது தேச நலனுக்கு எதிரானது. அவர் மீது துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அனுஷ்கா சர்மாவை விராத் கோஹ்லி விவாகரத்து செய்யவேண்டும். விராத் ஒரு தேசபக்தர். ஆனால் அனுஷ்கா சர்மா அப்படி கிடையாது. அனுஷ்கா தயாரிக்கும் வெப் சிரிஸை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


More Cinema News