கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மதுரையில் கொரோனா பாதிப்பு 500ஐ எட்டினாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. திருமலை நாயக்கர் மகாலில் நடந்து வந்த புதுப்பிக்கும் பணியும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கட்டுமானப் பணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதால், மகாலைப் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.