சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம்.. 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்..

TamilNadu government announces promotion, transfer of 39 IPS officers.

by எஸ். எம். கணபதி, Jul 1, 2020, 10:04 AM IST

சென்னை, மதுரை, திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் உள்படத் தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே,விஸ்வநாதன், ஏடிஜிபி(செயலாக்கம்) பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை பெருநகர புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் இருந்த டிஜிபி சுனில்குமார், மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம், ஏடிஜிபி(தொழில் நுட்பப்பிரிவு) பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த ரவி, ஈரோடு சிறப்புக் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தலைமையிட ஐஜி பதவி வகித்த, எச்.எம்.ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக திருச்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை அந்தப் பதவியில் இருந்த அமல்ராஜ், சென்னைக்குத் தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐஜி(பொது) பணியில் இருந்த கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா, மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர் அருண், சென்னை சட்டம்-ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சை டிஐஜி லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர வடக்கு இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னையில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை டிஐஜி கார்த்திகேயன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஐஜியாக பதவி உயவு பெற்று, சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி ஐஜியாக பதவி உயர்வில், சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை தலைமையிட இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் மகேஷ்வரி சென்னை தலைமையிட இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனர் எழிலரசன் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை டிஐஜி ஆன்னி விஜயா, திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர், கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அயல்பணியில் உள்ள அபிஷேக் திக்ஷித் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று டிஐஜியாக தொடர்கிறார்.சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பி மல்லிகா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமுண்டீஸ்வரி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்.

சமூக நுண்ணறிவு பிரிவு எஸ்பி லட்சுமி சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி ராஜேஸ்வரி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்,
சென்னை பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்வில் மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி டிஐஜியாக பதவி உயர்வில் திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை கமிஷனர் மயில்வாகனன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

You'r reading சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம்.. 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை