நடிகை பூர்ணாவை பிளாக்மைல் செய்த கூட்டத்துக்கு போலீஸ் வலை.. முக்கிய குற்றவாளிகள் கைது..

Poorna Blackmail Case: Main Culprists Arrested

by Chandru, Jul 1, 2020, 10:13 AM IST

பிரபல நடிகை பூர்ணாவுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு சிலர் பூர்ணவை திருமண செய்யும் திட்டத்துடன் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் யார் என்றே தெரியாத நிலையில் வீட்டிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்த போது, ​​“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது.

இது குறித்து பூர்ணா போலீசில் புகார் அளித்தார். அதை பார்த்து மேலும் பலர் கும்பல் பற்றி புகார் அளித்தனர். இதில் எட்டு மாடல்கள் உள்படப் பல பெண்களும், தாங்களும் அந்த கும்பலால் மிரட்டப்பட்டதாகவும், பணம் பறித்ததாகவும் புகார் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் தர்மஜன் போல் காட்டி என்பவரை போலீசார் விசாரித்தனர். அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். பிளாக் மைல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸ் மற்றும் ரபீக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று போலீசார் முடிவு செய்துள்ளார்களாம், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூர்ணாவிடம் போலீசார் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தி முடித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை