சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:சென்னை ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்(சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என்றும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இனி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனிமேல் மெட்ரோ புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என்று அழைக்கப்படும். மெட்ரோ ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசு தெரிவித்திருக்கிறது.