பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் கைது..

Film Director Velu Prabhakaran arrested for provocative speech

by Chandru, Jul 31, 2020, 14:58 PM IST

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் நாளைய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை இயக்கியதுடன் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நடிகை செர்லின் தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது வேலு பிரபாகரனுக்கு வயது 60.சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த கருப்பர் கூட்ட யூ டியூப் நிர்வாகிகளைக் கைது செய்தனர்.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. கருப்பர் கூட்டம் சுரேந்தரை ஆதரித்தும் கந்த சஷ்டி கவசம், இந்து மதத்துக்கு எதிராகச் சர்ச்சை கருத்து கூறி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் வேலு பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கமிஷனர் உத்தரவின் பேரில் இயக்குநர் வேலு பிரபாகரனை மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இன்று கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You'r reading பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் கைது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை