`மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும்! -சீனாவை கலங்கடிக்கும் `எஸ்எப்டிஎஸ் வைரஸ்

by Sasitharan, Aug 6, 2020, 17:20 PM IST

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே இன்னும் முழுமையாகக் குணமடையாத சீனாவில் தற்போது பழைய வைரஸ் ஒன்று புதிய வீரியத்துடன் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸும் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் எனக் கூறப்பட்டுள்ளதால் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருப்பது சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் தான்.

இந்த வைரஸுக்கு பெயர் `எஸ்எப்டிஎஸ்'. உண்ணி, நச்சு ஈ, வண்டுகளில் வெளியாகும் இந்த வைரஸ் இந்த பூச்சிகள் மனிதர்களைக் கடித்தல் மூலம் பரவும். இந்த வைரஸ் பன்யா வைரஸ் என்ற பிரிவைச் சேர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டே இந்த வைரஸ் சீனாவில் இருக்கிறது என்றாலும் இப்போது இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 37 பேர், அன்ஹூவில் 23 பேர் என மொத்தம் 60 பேர் எஸ்எப்டிஎஸ் வைரஸால் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். மேலும் 7 பேர் இதனால் மரணத்தைத் தழுவியுள்ளனர். எஸ்எப்டிஎஸ் வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும். நோயாளியின் உடலில் ரத்தம், சளி மூலம் மற்றவருக்குப் பரவும். மக்கள் பூச்சிக் கடிகள் மூலம் கவனமாக இருந்தால் இந்த வகை வைரஸில் இருந்து தப்பிக்க முடியும். காய்ச்சல், வெள்ளை அணுக்கள் குறைபாடு, ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைபாடு, வயிறு மற்றும் நரம்பு ரீதியான சிக்கல்கள், உடல்தசை வலி ஆகியவை இந்த வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் ஆகும்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை