`கவலை வேண்டாம் தம்பி..! - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை

Treatment by Chief Edappadis Immediate Response

by Sasitharan, Aug 7, 2020, 19:44 PM IST

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கொரோனா பரவல் தமிழகத்தில் தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும், உடனடியாக அவர்களது பதிவை டேக் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி சென்றடைவதை உறுதி செய்து வருகிறார். மற்ற மாநில முதல்வர்கள், தமிழக பிரமுகர்கள், பொதுமக்கள் என யார் உதவி கேட்டாலும் உடனே செய்து தருகிறார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி சமீபத்தில் ஒருவருக்கு உதவி கேட்டுப் பதிவிட, அதற்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்து அவர்களுக்குத் தேவையான உதவியையும் கொண்டு சேர வழிவகை செய்தார் முதல்வர். இதேபோல் ஆந்திராவில் தவிக்கும் தமிழக குடும்பங்களுக்கு உதவிகோரி ஒருவர் பதிவிட அதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்துக்கு எடப்பாடி கொண்டுசென்று அவர்களுக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையே, வேலூர் அருகே சந்ரு என்பவர், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து, ``48 வயதான என் அம்மாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது என் அம்மா வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். என் அம்மா ஏற்கெனவே டயாலிசிஸ் நோயாளி. அவருக்கு இன்று டயாலிசிஸ் செய்ய வேண்டும். எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. எனது தாயின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" எனப் பதிவிட்டார்.

இதற்கு டிவிட்டரில் உடனடியாக பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ``கவலை வேண்டாம் தம்பி! தங்களது தாயாருக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்'' எனக் கூறினார். இதைத்தொடர்ந்து நேற்று இரவே மருத்துவர்கள் பேசி, அதிகாலை 1 மணிக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞரின் தாய் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading `கவலை வேண்டாம் தம்பி..! - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை