பன்முகத்தன்மையை பாதுகாக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் வாழ்த்து செய்தி..

M.K.Stalin unfurl national flag in Dmk head quarters.

by எஸ். எம். கணபதி, Aug 15, 2020, 10:30 AM IST

சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்படப் பலரும் பங்கேற்றனர்.

முன்னதாக, .ஸ்டாலின் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை முத்துக்களாகக் கோர்த்துக் கொடுத்துள்ள அரசியல் சட்டத்தை நமக்கு அளித்துள்ள இந்த சுதந்திரத்தைப் பெற்றுந்தந்த தியாகிகளின் தியாகங்களை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம்.சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததும், அவர்களின் அறவழிப்போராட்டமும்; எல்லாத் தலைமுறையினரும் மனதில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருவூலமாகும். பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஆறு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் என்றைக்கும் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

14 முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில் தமிழகம் ஒரு களமாகப் பயன்பட்டிருக்கிறது” - என்று கலைஞர் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு ஏற்றாற் போல், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்குமான “தியாகிகள் பென்ஷன்” உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து - அவற்றைச் செயல்படுத்தியும் காட்டியவர்.ஆகவே இந்தச் சுதந்திர தினத்தில், “சாதி, மத, இன வேறுபாடுகளை” அறவே தூக்கியெறிந்து - “சகோதரத்துவம், சமத்துவம்” என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம்!

இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

You'r reading பன்முகத்தன்மையை பாதுகாக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் வாழ்த்து செய்தி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை