கொரோனாவால் இன்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. என்று சூழ்நிலை சரியாகிறதோ அன்றுதான் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்து இருந்தார். இதன் காரணாமாக, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விவரங்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதே போன்ற கல்லூரி மாணவர்களுக்கும் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை இன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் . இது சம்பந்தமான அரசாணை கல்வித்துறை செயலாளரால் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.