திருச்சி துணிக்கடைகளைகளில் பிரபலமாகும் ஸபீரா ரோபோட்…!

திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. 60 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப பரிசோதனை, கைகளைக் கழுவுதல் போன்றவற்றைக் கட்டாயமாக்கி, சுகாதாரத் துறை அறிவுரைகளை வழங்கி வருகிறது.

இதன்படி, வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு வாயிலிலேயே உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமிநாசினி அளிக்கின்றனர். தற்போது கொரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு மருந்து கொண்டு சென்று கொடுப்பதற்குப் பலவிதமான ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இப்போது பல வர்த்தக நிறுவனங்களிலும் கொரோனா தடுப்புக்கு ரோபோக்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். திருச்சியில் ஒரு பெரிய ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க ஒரு ரோபோ பயன்படுத்துகின்றனர். அந்த ரோபோ யாராவது முகக்கவசம் அணியாவிட்டால் காட்டிக் கொடுக்கும்.

மேலும், வாடிக்கையாளர்களுக்குக் கிருமிநாசினி அளித்து, அவர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதித்துப் பதிவு செய்கிறது.ஜாபி ரோபோ என்ற ரோபோக்களை தயார் செய்யும் கம்பெனியின் தலைமை செயல் அலுவலர் ஆசிக் ரஹ்மான் கூறுகையில், இந்த ரோபோ, கடைக்குள் எத்தனை வாடிக்கையாளர்கள் வருகின்றனர், எத்தனை மணிக்கு வந்து எத்தனை மணிக்கு வெளியே செல்கின்றனர் உள்படப் பல விஷயங்களைப் பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதைத் தாமாகவோ இமெயில் மூலம் தினமும் நிர்வாகத்திற்கு அனுப்பி விடும் என்றார்.