வலைத்தளம் மூலம் அறிமுகம்.. 23 வயது பெண்ணின் உதவி!.. புல்வாமா வழக்கில் அடுத்த `ஷாக்

Next shock in Pulwama case

by Sasitharan, Aug 27, 2020, 10:11 AM IST

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் உள்ள விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து அதிர்ச்சியைத் தருகின்றன. மொத்தம் 19 பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இதில் ஒருவர் 23 வயதே கொண்ட இளம்பெண் தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு உதவிக்கரமாக 23 வயது பெண் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மசூத் அஸாரின் மருமகன் முகமது உமர் ஃபரூக்தான் சம்பவத்துக்கு மூல காரணம். வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த உமர் ஃபரூக் 2018ல் காஷ்மீருக்குள் நுழைந்துள்ளார். அவருக்குத் தான் இன்ஷா ஜான் என்ற இந்த 23 வயது பெண் உதவியுள்ளார் என்று என்ஐஏ கூறியுள்ளது. உமர் பாரூக் காஷ்மீர் வருவதற்கு முன்பே இருவரும் வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி உள்ளனர்., இன்ஷா ஜான் புல்வாமாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் தொடர்ந்து தொலைப்பேசி மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக தொடர்பில் இருந்து அடிக்கடி பேசி வந்துள்ளனர். இவர்களின் தொடர்பு குறித்து இன்ஷா ஜானின் தந்தை தாரிக் பிர்வுக்கும் தெரிந்துள்ளது. பின்னர் தாரிக்கும் உமர் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு உதவியுள்ளார். புல்வாமாவிலும் அதைச் சுற்றியும் நடமாடுவதற்கு உமர் பாரூக் மற்றும் அவரின் இரண்டு கூட்டாளிகளுக்கு தாரிக் பிர் வசதி செய்து கொடுத்துள்ளார் என்று என்ஐஏ அறிக்கையில் கூறியுள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள மூத்த என்ஐஏ அதிகாரி ஒருவர், ``இன்ஷா ஜான் மற்றும் உமர் பாரூக்க்கு இடையே நடந்த சாட்களை நாங்கள் வைத்துள்ளோம் . அவர்களின் நெருக்கத்தை அந்த செய்திகளே விவரிக்கின்றன. தந்தையும், மகளும் சேர்ந்து உமர் பாரூக், சமீர் தார் மற்றும் அதில் அகமது தார் ஆகியோரை 15க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பிற தளவாடங்களை இந்த சந்திப்பின்போது வழங்கியுள்ளனர். இதுமட்டுமில்லாமல், இவர்கள் அனைவரும், 2018 மற்றும் 2019க்கு இடையில் பலமுறை இன்ஷாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இவை அனைத்தையும் குற்றப்பத்திரிகையிலும் குறிப்பிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

You'r reading வலைத்தளம் மூலம் அறிமுகம்.. 23 வயது பெண்ணின் உதவி!.. புல்வாமா வழக்கில் அடுத்த `ஷாக் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை