கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கொரோனா காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என அறிவித்த யுசிஜி, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டது.
கொரோனா பரவல், வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவுற்று இருக்கும் நிலையில் யுஜிசி சார்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது