தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 4.45 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாகச் சென்னையில் புதிதாகத் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று ஆயிரத்துக்குக் கீழ் சென்றுள்ளது. கோவை, சேலம், கடலூர் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 82,901 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இது வரை 50 லட்சத்து 47042 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நேற்று(செப்.3) 5892 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 45,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6110 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 86,173 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 92 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7608 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. நேற்று 968 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 38,724 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 378 பேருக்கும், கோவையில் 593 பேருக்கும், சேலத்தில் 208 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 150 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டில் இது வரை 27.286 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17,818 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 25,563 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர், விழுப்புரம், வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.