சூப்பர் ஸ்டார்.. கருணாநிதியின் சாரதி... பொதுக்குழுவில் எமோஷனாகிய ஸ்டாலின்!

by Sasitharan, Sep 9, 2020, 18:06 PM IST

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர் பாலுவை வாழ்த்தி பேசினார். முதலில், ``இன்னும் 8 மாதங்களில் திமுக ஆளும் கட்சியாக இருக்கும். பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் நியமிக்கப்பட்டதை அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி சந்தோசம் அடைவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளார்.

9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்" என்றவர், டி.ஆர் பாலுவை பற்றி பேசினார். அதில், ``திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு. வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடிய தம்பிகளில் ஒருவர் என கருணாநிதியால் புகழப்பட்டவர் பாலு. கருணாநிதிக்கு சாரதியாக இருந்து சிறை சென்றார். மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் றையில் இருந்தவர். கருணாநிதிக்கு ஒன்று என்றால் உயிரையும் கொடுக்க கூடியவர் பாலு" என்று பாராட்டி பேசினார்.

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை