சென்னை, கோவை, சேலத்தில் கொரோனா பரவல் நீடிக்கிறது..

Advertisement

சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் 900க்கு அதிகமாகவும், கோவை, சேலத்தில் தினமும் 300க்கும் அதிகமாகவும் தொற்று கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் நேற்று(செப்.10) 5528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 6 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6185 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 29,416 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 64 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8154 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.சென்னையில் நேற்று 991 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 45,606 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 279 பேருக்கும், கோவையில் 440 பேருக்கும், சேலத்தில் 300 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 296 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 173 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டில் இது வரை 29,507 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,976 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,416 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 83,411 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 56 லட்சத்து 49,635 பேருக்குச் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>