செப்.28ல் அதிமுக செயற்குழு கூட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

AIADMK executive committee meeting on Sep 28 OPS, EPS announcement!

by Sasitharan, Sep 18, 2020, 20:33 PM IST

அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்றனர். வரவிருக்கும் தேர்தல், சசிகலா வெளியே வரவுள்ளது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்கள்,

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்... நிரந்தர முதல்வர் எடப்பாடி எனத் தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டு இருக்கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை சமீபகாலமாக அதிமுகவை உலுக்கி வருகிறது. அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை இந்த சர்ச்சைக்கு வித்திட்டு வருகின்றனர். ஆனால் அப்படி எதுவும் பிரச்னை இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொண்டர்களின் இந்த முழக்கம், கட்சியில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை இருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்து காண்பிக்கும் வகையில் அமைந்தது.

இதனிடையே, மாலையில் தொடங்கிய கூட்டம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. கூட்டத்தில் தேர்தல் களம் பற்றி ஆலோசனை நடந்ததாக வெளியே வந்தவர்கள் தகவல் தெரிவித்துசென்றனர். இந்நிலையில் செப்.28ல் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை