இது சிக்ஸ்பேக் அர்ஜுன் சச்சினின் செல்ல மகன்

Arjun tendulkar shares his post workout picture from uae

by Nishanth, Sep 18, 2020, 20:09 PM IST

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சிக்ஸ் பேக் போட்டோ வைரலாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரை போல அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரால் இளம் வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளில் கால் பதிக்க முடியாவிட்டாலும் ஆங்காங்கே அவரது தலை தெரிந்து கொண்டு தான் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் அபுதாபியில் இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாயின. இதையடுத்து அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் அவர் அந்த அணியில் சேர்க்கப்படவில்லை என்றும் வலை பந்துவீச்சாளராக மட்டுமே இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய சிக்ஸ் பேக் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் ஏராளமான போட்டோக்களை வெளியிட்டிருந்தார். இப்போது தனது கட்டுடல் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cricket News

அதிகம் படித்தவை