இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது வந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . ஆனால் இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று பங்குச் சந்தையில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4818க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4834க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4834
8 கிராம் ( 1 சவரன் ) - 38672
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5059 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 16 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5075 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5075
8 கிராம் - 40600
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 40 பைசா உயர்ந்து , கிராம் 64.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64600 க்கு விற்பனையாகிறது.