அப்போ அந்த ரெண்டு நடிகரும் ஒரே படத்துல நடிக்கலயா? பிரபல இயக்குனர் பதிலால் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குழப்பம்..

Actor Simbhu in Parthibans Puthiya Paathai 2nd Part

by Chandru, Sep 30, 2020, 12:36 PM IST

ஒரு வருடத்துக்கு மேலான இடை வெளிக்கு பிறகு படத்தில் நடிக்க தீவிரமாக கதை கேடு வருகிறார் சிம்பு ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து நடிகை ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மிஷ்கின் படம், பாண்டிராஜ் படம், சுசீந்தரன் படங்களில் நடிக்க உள்ள தாகவும் கோலிவுட்டில் பேச்சு உள்ளது. இந்த நிலையில்தான் மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் நடித்து ஹிட்டான ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, பார்த்திபன் நடிப்பதாக கூறப் பட்டது. தற்போது மற்றொரு தகவல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
பார்த்தின் நடித்து இயக்கிய முதல்படம் புதியபாதை. 1989ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. இது பார்த்திபனுக்கு சிறந்த பெயரை பெற்று தந்ததுடன் தேசிய விருதையும் வென்றது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக பார்த்தபன் தெரிவித்து வந்தார். இந்த படத்தில் சிம்பு நடிக்க விருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்ட போது, புதியபாதை 2ம் பாகம் உருவாக உள்ளது. இதுவொரு நல்ல ஸ்கிரிப்ட். இதில் சிம்பு நடித்தால் பொருத்தமாக இருக்கும். அதேபோல் உள்ளே வெளியே 2ம் பாகம் படம் உருவானால் அதிலும் சிம்பு நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றார்.


சிம்புவிடம் பார்த்திபன் இதுகுறித்து பேசி வருகிறாராம். அப்படியென்றால் பார்த்திபனும் சிம்புவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வந்தே அந்த படம் இது இல்லியா என்று கேட்டு வருகின்றனர்.More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை