கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினருக்கு வெட்டி வேர் மாஸ்க் அன்பளிப்பு.. கொடுத்தது யார் தெரியுமா?

Poornima bhagyaraj gifts herbal masks for keerthi suresh and family

by Nishanth, Sep 30, 2020, 12:55 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது தாய் மேனகா சுரேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் வெட்டிவேர் கலந்த நறுமண மாஸ்குகளை பரிசாக அளித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளார்.கொரோனாவின் அதீத பரவல் காரணமாக இப்போது யாருடைய முகத்தையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பெரும்பாலோனோர் பொது இடங்களில் தங்களது முகத்தில் மாஸ்க் அணிந்து தான் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

பாதி முகத்தை இது மறைத்து விடுவதால் நமக்கு மிகத் தெரிந்தவர் நம் முன்னால் வந்தால் கூட அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க பெரும் சிரமமாக உள்ளது. அவர்கள் சிரிக்கிறார்களா, அழுகிறார்களா என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் மாஸ்குகளிலும் பலர் தங்களது வியாபார உத்தியைக் கையாளத் தொடங்கி விட்டனர். முதலில் கைக்குட்டையில் தொடங்கிய இந்த மாஸ்குகள் நாளடைவில் ஆடைகளுக்கு மேட்சாக பல டிசைன்களில் வரத் தொடங்கிவிட்டது.

மாஸ்குகளில் அவரவர் போட்டோவையும் பிரிண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். இவற்றில் உள்ள போட்டோவை பார்த்துத் தான் பலரையும் இப்போது அடையாளம் கண்டுபிடிக்க வேண்டிய நிலை வந்து விட்டது.நீண்ட நேரம் முகத்தை ஒட்டியே இருப்பதால் தற்போது நறுமண வாசனையுடன் கூடிய மாஸ்குகளும் விற்பனைக்கு வந்துவிட்டது. இப்படித் தயாரிக்கப்பட்ட மாஸ்குகளைத் தான் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனது நெருங்கிய தோழியான நடிகை மேனகா சுரேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

வெட்டிவேர் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த மாஸ்குகளை தன்னுடைய 35 வருடத் தோழியான மேனகாவின் குடும்பத்தினருக்குப் பூர்ணிமா பாக்யராஜ்அனுப்பி வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், தனது தாய் மேனகா மற்றும் தங்கையுடன் இந்த வெட்டிவேர் மாஸ்குகளை அணிந்த போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த நறுமண வெட்டிவேர் மாஸ்குகளை தங்களுக்குத் தந்த நடிகை பூர்ணிமாபாக்யராஜ்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை