குற்றால அருவியில் குளிக்க விடுங்க சார்.. வியாபாரிகள் கோரிக்கை

Give permission to bath in Courtallam Falls

by Balaji, Oct 4, 2020, 16:19 PM IST

குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லவும் அருவிகளில் குளிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளும், குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலாத்தலம் என்ற அடிப்படையில் குற்றாலத்தில் தொடரும் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டும் என்று குற்றாலம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கொரானா ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டுவிட்டது. வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றுலா தலங்களில் மட்டும் இந்த தளர்வு அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்னும் தடை நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேசமயம் கொடைக்கானல் நீலகிரி உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் குற்றாலவாசிகளை குறிப்பாக வியாபாரிகளை கொந்தளிக்கச் செய்திருக்கிறது.குற்றாலத்தில் தற்போது சீசன் முடிந்து அருவிகளில் குறைவான அளவு தண்ணீர் கொட்டிக் கொண்டு இருக்கிறது எனவே அருவியை பார்வையிடவும் அருவியில் சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை தொடர வழி கிடைக்கும் என்றும் வியாபாரிகளும் விடுதி நடத்துபவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே சீசன் காலத்தில் ஊ ரடங்கால் தங்களது வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஊரடங்கு நீட்டிப்பு தங்களை வேதனைக்குள்ளாக்குகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.எனவே மற்ற சுற்றுலாத் தலங்களைப் போலவே போல குற்றாலத்திலும் ஊரடங்கை உடனே தளர்த்தி சுற்றுலா பயணிகள் வந்து செல்லவும் அருவியில் குளிக்க அனுமதிக்கவும் வேண்டும் என்பதே குற்றால வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You'r reading குற்றால அருவியில் குளிக்க விடுங்க சார்.. வியாபாரிகள் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை