தாய்ப்பாலுக்கு இணையான கழுதை பால் எனும் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இன்று கழுதைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அந்த இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற இப்போது திண்டுக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் முனைப்புக் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் மூன்று வகை கழுதை ரகங்கள் உள்ளன. இதில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் அளவில் அதிகமாகக் கழுதைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கழுதைகள் இனம் படிப்படியாக அழிந்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 9,000 கழுதைகள் இருந்தன தற்போது 1490 கழுதைகள் மட்டுமே உள்ளது. நோய் தாக்குதல், சரியான பராமரிப்பு, தீவனம் இல்லாமை போன்ற காரணங்களால் கழுதை இனம் அழிந்து வருகிறது. இதைத்தடுத்து கழுதைகளைப் பாதுகாக்கத் திண்டுக்கல்லில் உள்ள கால்நடை பல்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொண்டு திண்டுக்கல் பல்கலையில் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மையத்தில் கழுதை வளர்ப்பு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் . நடத்தப்பட்டது.இதில் கழுதையின் குணாதிசயங்கள், தீவனம், இனப்பெருக்கம், நோய், கழுதைகளை அழிவிலிருந்து காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் கழுதைகளுக்கான நோய் பராமரிப்பு, செயல் திறன் பயிற்சி, குடற்புழு மருந்து, தாது உப்பு கலவை முதலுதவிப் பெட்டிகள் ஆகியவை வழங்கப்பட உள்ளது. விவசாயத்திற்கு நல்ல உரமாகப் பயன்படுகிறது.சுமை தூக்குதல் விவசாயம் என பல்வேறு பயன்பாடு கழுதைகளால் இருக்கிறது. என்பதால் கழுதைகளைக் காப்பாற்றுவது கழிவுகளைக் காப்பது காலத்தின் கட்டாயம்..