ஓபிஎஸ்ஸின் மைந்தன் தனி விமானத்தில் மாலதீவு பயணம்.

by Balaji, Oct 11, 2020, 18:06 PM IST

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஸின் மகனும் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் நேற்று தனி விமானம் மூலம் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.

அவருடன் சரவணன் பழனியப்பன் , விஜயகுமரன் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரனின் மகன் ஆறுமுகநயினார் மற்றும் விஜயநாத் வினாயகமூர்த்தி உள்பட சில நண்பர்களும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களை தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை. எனவே வழக்கம்போல் பல்வேறு விதமான ஊகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. பெருந்தொழில் முதலீடு சமந்தமானது என்று சிலரும், ஏதேனும் நிறுவனங்களை அல்லது இடங்களை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று இன்னொரு தரப்பும், அதெல்லாம் இல்லை முக்கியமான நிகழ்வுகளுக்கான பணப் பரிவர்த்தனை குறித்த ஏற்பாடுகளுக்கான முதல் கட்ட நடவடிக்கை என்று சிலரும் சொல்லி வருகின்றனர்.

இப்படி பலவாறாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தாலும். இந்த கேள்விகளுக்கு பின்னரும் சம்பந்தப்பட்டவர் தரப்பிலிருந்து எந்தவிதமான விஷயமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Get your business listed on our directory >>More Tamilnadu News