இதையா தேடுகிறீர்கள்? தேடலை கூகுள் எப்படி கணிக்கிறது?

How does Google predict search?

by SAM ASIR, Oct 11, 2020, 18:20 PM IST

கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடுவதற்குத் தொடங்கும்போது, அவற்றைக் குறித்த கணிப்புகளை அது கொடுப்பதை காணலாம். கூகுள் தேடுபொறி, பயனர் தேடுவதை எப்படி கணிக்கிறது என்பது குறித்து கூகுள் நிறுவனம் அதன் வலைப்பக்கத்தில் விளக்கியுள்ளது. பயனர், தேடுபொறியில் தகவலை உள்ளீடு செய்ய ஆரம்பித்ததும் அது குறித்த பொதுவான மற்றும் அப்போது பரவலாக இருக்கும் கேள்விகளை இணைத்து கணிப்புகள் உருவாக்கப்படுகின்றன. பொதுவான கணிப்புகளை மட்டும் அளிக்காமல் பயனர் தேடும் மொழியும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதன் மூலம் கிட்டத்தட்ட அவர் தேடுவதையொட்டிய கணிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன என்ற கூகுள் விளக்கியுள்ளது.

நீளமான கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை அளிக்கும்வண்ணம், கூகுளின் கணினிகள் முழு கேள்வியின் பகுதிகளாக பிரித்து கணிப்புகளை தரும். குறிப்பிட்ட சமயத்தில் பெருகிவரும் தேடல், தலைப்புகளை கருத்தில் கொண்டு அவற்றுக்கேற்ற கணிப்புகளும் தரப்படுகின்றன. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து கூகுள் தேடுபொறியில் 'big' என்ற தேடினால், Bigg Boss ஒளிபரப்பு சமயத்தை கருத்தில் கொண்டு, Bigg Boss, Bigbasket, Bigg boss 14, big boss season 4 tamil, bigg boss 4 tamil contestants, bigg boss 14 contestants என்ற கணிப்புகளை கூகுள் கொடுக்கிறது.

பயனர் தேடும் தலைப்பு மற்றும் தேடப்படும் காலம் இவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, 'நியூயார்க் பயணம்" (trip to New York) என்ற தேடலுக்கு, அது டிசம்பரை ஒட்டிய காலமாக இருந்தால், 'கிறிஸ்துமஸின்போது நியூ யார்க் பயணம்' (trip to New York for Christmas) என்ற கணிப்பினை கூகுள் கொடுக்கும்.

கூகுள் கொடுக்கும் கணிப்புகள் முழுமையானவை அல்ல என்றும், உதவியாக அமையாத அல்லது கொள்கைக்கு புறம்பான கணிப்புகளை கொடுப்பதை தடுக்கும் வண்ணம் கூகுளின் செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூகுளின் தானியங்கி அமைப்பு, கொள்கைக்குப் புறம்பான கணிப்புகளை கண்டுபிடிக்க தவறினால் அப்படிப்பட்ட கணிப்புகளை அகற்றுவதற்கென்று ஒரு குழு இருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது.

You'r reading இதையா தேடுகிறீர்கள்? தேடலை கூகுள் எப்படி கணிக்கிறது? Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை