கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ மகன்!

by Sasitharan, Oct 17, 2020, 18:55 PM IST

சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளியான அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 8 நாட்களுக்கு முன்பாக சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அன்பழகன் உயிரிழந்தார். இவரின் மறைவு திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தொலைபேசியில் எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு மகனின் பிரிவால் துயருற்றிருக்கும் சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!' எனத் தெரிவித்துள்ளார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Tamilnadu News