கொரோனா தொற்று கடந்த 10 நாட்களாக, தமிழகத்தில் குறைந்து வருகிறது. இன்று 3077 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ``கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக ஊசி போடப்படும்" எனக் கூறியிருந்தார். இதைத்தான் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.
அதில், ``இலவச #CoronaVaccine-ஐ மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை!. நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை!" எனக் கூறியுள்ளார்