தமிழகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 33 ஆக குறைந்தது...

Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 33 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நேற்று 33 ஆகக் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்கு இது அதிகமாகக் காணப்பட்டது.

பின்னர், இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 3057 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 3250 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4262 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 59,432 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 33 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,858 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 32,960 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 844 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 186 பேர் காஞ்சிபுரம் 87, திருவள்ளூர் 168, கோவையில் 280, ஈரோடு 106, சேலம் 185, திருப்பூர் மாவட்டத்தில் 130 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 94,139 பேருக்கும், செங்கல்பட்டில் 42,245 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,806 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 93 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 81,472 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>