உத்தரப்பிரதேச கிராமத்தில் முகாமிட்ட தமிழ் நடிகையால் பரபரப்பு..

Actress Sai Pallavi At Uththra Paradesh

by Chandru, Oct 24, 2020, 09:38 AM IST

அரசியல் கலவரம், பலாத்கார சம்பவத்துக்கு எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு பரபரப்பான சூழல்கள் உத்தரப் பிரதேசமே சமீபகாலமாகக் குழப்பப் பூமியாக இருந்து வருகிறது. எதற்கும் பயப்படாமல் உத்தரப்பிரதேசம் பிப்ரி கிராமப் பகுதியில் முகாமிட்டிருக்கிறார் நடிகை சாய்பல்லவி. ஆம், ரவுடி பேபி மாரி 2 நடிகை சாய்பல்லவியே தான்.இவர் எதற்கு அங்குச் சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக அறுதல் சொல்லப் போய்விட்டாரா என்று ஷாக் ஆகவேண்டாம். அடுத்து அவர் நடித்து வரும் படப் பிடிப்புக்காகச் சாய் பல்லவி அங்குச் சென்றிருக்கிறார்.

படப் பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டு புத்தகத்தில் மூழ்கி விடாமல் கிராமத்தில் மக்களோடு மக்களாகப் பழகி வருகிறார். கிராமத்துச் சிறுவர், சிறுமிகளை அழைத்து தன்னை சுற்றி அமர வைத்து அவர்களுடன் உரையாடுவதுடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைகளில் தானே மருதாணி போட்டு விட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள் சாய் பல்லவி எங்குச் சென்றாலும் அவர் பின்னாலேயே சுற்றித் திரிகின்றனர். அந்த புகைப் படங்களைச் சாய் பல்லவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, சந்தோஷம் என்னுடைய செல்லங்களா, பிப்ரி பிள்ளைகளா என மகிழ்ச்சி வெளியிட்டு இதய வடிவ ஈமோஜியை பகிர்ந்திருக்கிறார். சாய் பல்லவி குழந்தைகளுடன் செலவிட்ட தருணங்களை கண்ட நடிகைகள் சமந்தா, அனுபாமா பரமேஸ்வரன் இருவரும் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை