தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்...!

Special trains will run on the 26th ahead of Deepavali

by Balaji, Oct 24, 2020, 18:45 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்குத் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதன் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில்களில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்
தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்குக் கொல்லம் சென்றடையும்.
கொல்லத்திலிருந்து வரும் 26ம் தேதி பகல் 12 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3.05 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.திருச்சியில் இருந்து 26ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.சென்னை எழும்பூரில் இருந்து 27ம் தேதி இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்குத் திருச்சி சென்றடையும்.

தஞ்சாவூரில் இருந்து 26ம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரயில் மறுநாள் நாள் காலை 4.30 மணிக்குச் சென்னை எழும்பூரை அடையும்.சென்னை எழும்பூரில் இருந்து 27-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6 மணிக்குத் தஞ்சாவூர் சென்றடையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை