இறுதி பருவத்தேர்வு கட்டாயம், யூஜிசி நிர்பந்தம்!

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

by Loganathan, Oct 30, 2020, 14:04 PM IST

கொரேனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டது. எனவே கல்லூரியின் பருவத்தேர்வுகள் நடைபெறாமல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில் தமிழக அரசின் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி கல்லூரி பயிலும் மாணவர்களின் அனைத்து பருவத்தேர்வுகளும் தேர்ச்சி என்று அறிவித்தார். இதனை ஏற்கமுடியாது என கல்வியாளர்களும், யூஜிசியும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் இறுதி மாணவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை பல்கலைக்கழகத்தின் வரம்பிற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யூஜிசி பதில் மனுதாக்கல் செய்தது‌. அதில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பருவத்தேர்வை நடத்தாமல், முந்தைய பருவத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கும் அதிகாரப் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இறுதி பருவத்தேர்வுகள் நடத்துவது கட்டாயம் எனவும், செப்டம்பர் 30 க்குள் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை