இரண்டு தொகுதி பிளான்... திருச்சி டார்கெட்... கமலின் எலெக்ஷன் மூவ்!

kamals new move to face assembly election

by Sasitharan, Nov 4, 2020, 21:59 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த கமல்ஹாசன் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். அதுவும் முதல்வர் வேட்பாளராக. இதற்கான வேலைகளை இப்போது இருந்தே முடுக்கி விட்டுள்ளார் கமல். எனினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ``கமலை பொறுத்தவரை மதச்சார்பற்ற மனிதராக, மதசார்பற்றக் கருத்துகளை, இடதுசாரி கருத்துகளைச் பேசுகிறார். அப்படிப்பட்டவரின் அரசியல் மதசார்பற்ற அணிக்கு உதவவில்லை. எனவே,கமல் தனித்து நிற்காமல், எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம்" . என்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கேற்றாற்போல், ``திராவிடத்துடன் தான் கூட்டணி, கழகங்களுடன் கூட்டணி இல்லை. 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும், மக்களுடனே எங்கள் கூட்டணி" என்று பேசியிருக்கிறார். இதனால் கூட்டணி குறித்து அவர் முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகிறது. ஆனால் தற்போது கமலின் தேர்தலில் அடுத்த என்ன செய்ய போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது அவர் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல் தான். இன்று கமல் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ``திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள காத்திருக்கும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்'' என்று அச்சிட்டுள்ளனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது.

இது தொடர்பாக, திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கிஷோர் குமார் பேசும்போது, ``போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகம் அரசியல் பரபரப்புக்காக போடவில்லை. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதற்காக எங்களது விருப்பத்தைதான் போஸ்டரில் தெரிவித்துள்ளோம். இதற்காக சாதகமான அம்சங்களை எடுத்துச் சொல்லியுள்ளோம். மேலும் வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். அதில் ஒன்று நிச்சயம் திருச்சியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

You'r reading இரண்டு தொகுதி பிளான்... திருச்சி டார்கெட்... கமலின் எலெக்ஷன் மூவ்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை