ஜிப்மரில் சேர போலி சான்றிதழ் : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர வெளி மாநிலத்தவர்களுக்கு போலி முகவரி சான்றிதழ் கொடுக்கப்படுவதாகப் புகார் வந்துள்ளது எழுந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

by Balaji, Nov 9, 2020, 10:12 AM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பதிலாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வசித்து வருவதாகப் போலியான சான்றிதழைக் கொடுத்து புதுச்சேரி மாநிலத்துக்கு உரிய இட ஒதுக்கீட்டின் படி சீட் பெறுவதாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,: இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்பாக ஜிப்மர் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம், மருத்துவக் கல்லூரி இடங்கள் முழுமையாகப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும்.

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலி சான்றிதழ் கொண்டு வந்தால் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன். அவரும் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியாக இருந்தால், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் புதுச்சேரி மாநிலத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படும். இல்லை என்றால் கண்டிப்பாக அது மறுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் நிறையப் பேர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்‌ என்று போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ இடத்தை ஜிப்மரில் பெற்றிருப்பதாகப் புகார் வந்திருக்கிறது. இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். மாவட்ட கலெக்டரும் விசாரணை செய்து ஒரு முடிவு எடுப்பார். புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த வரையில் இம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமே, தவிரப் போலி சான்றிதழ் கொடுத்து விட்டு புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக மத்திய மருத்துவ கழகத்திற்கும் நான் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.

You'r reading ஜிப்மரில் சேர போலி சான்றிதழ் : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை