ரகசிய தேனிலவு ஜோடி கடற்கரை தீவில் உல்லாசம்..

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டார். குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காஜல் பஞ்சாபி சமுதாயத்தைச் சேர்ந்தவர், கவுதம் காஷ்மீர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரவர்கள் முறைப்படி திருமணத்தை நடந்த போதும் தென்னிந்திய தெலுங்கு முறைப்படியும் திருமணம் நடந்தது.

இதுபற்றி காஜல் கூறும்போது,மும்பையில் இருந்ததைவிட தென்னிந்தியாவில் அதிக நாட்களைக் கழித்திருக்கிறேன் பல தெலுங்கு படங்களில் திருமண காட்சிகளில் நடித்திருக்கிறேன். நிஜ திருமண விழாக்களிலும் அங்குக் கலந்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எனது நிஜ திருமணத்தில் தென்னிந்திய அதாவது தெலுங்கு முறைப்படியான சடங்கையும் செய்ய வேண்டும் காஜல் கேட்டுக்கொண்டதால் அந்த முறையிலும் திருமண சடங்குகள் நடந்தன.

காஷ்மீரி, பஞ்சாபி திருமண சடங்குகளை செய்தல் மகிழ்ச்சி அத்துடன் தென்னிந்தியாவுடனான எனது தனிப்பட்ட உறவுகள் முக்கியம். ஜீலகர் பெல்லம் முறைப்படியும் திருமண சடங்கு நடந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்று காஜல் தெரிவித்தார். திருமணம் முடிந்த நிலையிலும் தம்பதியினர் தங்கள் தேனிலவு திட்டங்களை உறுதிப்படுத்தாமலிருந்தனர். தேனிலவுக்குச் செல்லாமல் காஜல் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.ஆனாலும் 2 திருக்களுக்கு முன் இளம் தம்பதியினர் அதிகாலையில் தங்கள் தேனிலவு பயணத்தை ரகசியமாக மேற்கொண்டனர்.

பைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்தார். நடிகை தனது இன்ஸ்டாகிராம் இரண்டு படங்களை வெளியிட்டார், இதில் ஜோடியின் பைகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பதிவில் "செல்ல தயாராக உள்ளது" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த தலைப்பு ஒரு விமான ஈமோஜியுடன் இருந்தது. ஆனால் எந்த நாட்டுக்குச் செல்கிறோம் என்பதைச் சொல்லவில்லை.கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரவேண்டும் என்பது போல் தற்போது அவர் தேனிலவு கடற்கரை தீவான மாலத்தீவில் நடந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

மாலத்தீவு கடற்கரையில் காஜல்,கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் உல்லாசமாகச் சுற்றித்திரியும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் காஜல். இரண்டு மூன்று வாரம் தேனிலவு பயணத்துக்குப் பிறகு காஜல், கவுதம் ஜோடி திரும்பி வருகின்றனர். ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் 'இந்தியன்' படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமலிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :