பிரபல நடிகரின் சவாலுக்கு உடனடி பதில் அளித்த நடிகை..

by Chandru, Nov 9, 2020, 10:37 AM IST

கடந்த 8 மாதமாக கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. ஓரளவுக்குத் தொற்று குறைந்தாலும் இன்னும் முற்றிலுமாக நீங்கிய பாடில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதில் பல பிரபல திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். இதற்கிடையில் கிரீன் இந்தியா சவால் ஒரு பக்கம் இந்தியாவில் பரவியது.

பிரபலங்கள் மரக்கன்றை நட்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அதே சவாலை செய்ய கேட்டு வருகின்றனர். நடிகர் மகேஷ் பாபு தன் வீட்டில் மரக்கன்று நட்டுவிட்டு அந்த சவாலை ஏற்கும்படி நடிகர் விஜய்யிடம் கூறினார். அதை விஜய் உடனடியாக ஏற்று தன் வீட்டில் மரக்கன்று நட்டார்.அதேபோல் நட்சத்திர நடிகர் பிரபாஸ் தனது வீட்டில் ஒரு மரக்கன்றுகளை நட்டு இந்த ஆண்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார், மேலும் பல நடிகர்கள் இதைப் பின்பற்றியுள்ளனர்.

தற்போது நடிகர் ராம் சரண் அந்த சவாலை நிறைவேற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் இந்தி நடிகை அலியா பட் ஆகியோருக்கு சவாலை ராம் சரண் கடத்தி விட்டார். அதற்கு அலியா உடனடியாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஊரடங்கு காலத்தில் சமையலறை தோட்டக்கலைகளைச் செய்ய கற்றுக் கொண்டேன், அது குறித்து பகிர்ந்து கொள்ள படங்கள் எதுவும் இல்லை. இப்போது ராம் சரண் சவால் ஏற்று மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பே இந்த சவாலை நடிகைகள் தியா மிர்சா, பூமி பெட்னேகர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு பரிந்துரைக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார் அலியா பட்.அலியாபட் முதன்முறையாக ஆர் ஆர் ஆர் படம் மூலம் தென்னிந்தியப் படத்தில் நடிக்கிறார். ராஜமவுலி இயக்குகிறார். ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் கொமரம் பீம் கதாப்பத்திரத்தில் நடிக்கும் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி அணிந்ததற்கு தெலங்கானா பா ஜ தலைவர் மற்றும் ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டீஸரில் உள்ள ஜூனியர் என் டி ஆர் காட்சி களை நீக்காவிட்டால் ராஜ மவுலியை தாக்குவோம், தியேட்டரை எரிப்போம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க அலியாபட் இம்மாதம் வருவதாக இருந்தது, அதற்கான ஏற்பாடுகள் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று அவரது வருகை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. ஆர் ஆர் ஆர் பட பிரச்சனை காரணமாக அவரது படப்பிடிப்பு தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை