பல்வேறு மாநிலங்களில். பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே இத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. எனவே இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுபோன்ற மனுக்கள் தீபாவளி நேரத்தில் பணம் வசூலிக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் படுவதாகவும் கடந்த வருடம் இதே போன்ற மனுத் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழகத்தில் எத்தனை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன? எத்தனை லட்சம் பேர் பணிபுரிகின்றனர்? இதுவரை விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? விபத்துகளைத் தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் தற்போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ஆகிய விபரங்கள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். விசாரணை டிசம்பர் 4ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.