நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பு வழங்க வேண்டாம்- நீதிபதி வேண்டுகோள்

by Balaji, Nov 12, 2020, 15:19 PM IST

நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அக்கடிதத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு வகைகளை வழங்க வேண்டாம். அது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மாவட்ட எஸ்.பி. தடுத்து நிறுத்த வேண்டும்.

தீபாவளி பரிசு வழங்குவது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்றாலும் கூட அது சட்டப்படி தவறு. இதை உணர்ந்து நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்குவதைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை