32 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்று சூர்யா பறக்கவிட்ட கடிதம்..

Advertisement

வாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களைக் கவுரவித்தார் சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரைப் போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார்.

ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது.இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்குச் சமர்ப்பணமாக சூரரைப் போற்று திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாகக் கடல் மட்டத்திலிருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் சூர்யாவுடன் நடை பெற்ற ஒரு நிகழ்வின் மூலம் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட 58,000 கையெழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 கையெழுத்துகள் விண் வெளியில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. தனது அன்பான ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் விசேஷ செய்தியுடன் கூடிய ஒரு தனித்துவமான வீடியோவை சூர்யா பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படத்துக்குக் கிடைத்த அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதைச் சாதிப்பது சாத்தியமே என்பதையும், வானம் கூட எல்லை இல்லை என்பதையும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் சூரரைப் போற்று திரைப்படமும் இந்த சமர்ப்பணமும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

படத்தின் வெளியீட்டையும், பார்வையாளர்களின் எதிர்வினைகளையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்றார்.ஒரு அச்சமற்ற புரட்சியாளரின் அசாதாரணமான சாதனைகளுக்கு சிறகுகளை அளிக்கும் இந்த உணர்ச்சி நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ப்ரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன் (2டி) மற்றும் குணீத் மோங்காவின் ஷிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>