சைக்கோவாக மாறிய மற்றொரு ஹீரோ..

by Chandru, Nov 12, 2020, 15:01 PM IST

சைக்கோ த்ரிலார் படங்கள் அவ்வப்போது வருகின்றன. அந்தபாணியில் மற்றொரு படம் உருவாகி வருகிறது.தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரம், நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதைகளன்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.

நடிகர் வெற்றிக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகிவரும் "மெமரிஸ்" படத்தின் போஸ்டரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

நடிகர் வெற்றி நடிப்பில் இயக்குநர் ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகிவரும்
"மெமரிஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கொரோனாவிற்கு முன்னதாகவே துவங்கப்பட்ட படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், எஞ்சிய பகுதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது முழுதாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. நடிகர் வெற்றி டப்பிங் பணிகளில் கலந்து கொண்டு தனது பகுதிகளுக்கான டப்பிங்கை செய்து வருகிறார்.

இறுதிக் கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகுமென்று படக்குழு தெரிவித்துள்ளது. ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெற்றி ஹீரோவாக நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடிக்கிறார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். பிரசான் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரன் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தைப் பிரமாண்ட முறையில் திரையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை