சென்னை, கோவையில் நீடிக்கும் கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் சரிவு..

Advertisement

சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது.நேற்று(நவ.17) மாநிலம் முழுவதும் 61,644 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1652 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 61,568 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2314 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 34,970 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 18 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,513 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அக்டோபர் கடைசி வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து, நேற்று 492 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 112 பேர், கோவையில் 170 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் 83 பேர், காஞ்சிபுரம் 76, சேலம்69, ஈரோடு 47 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவான பேருக்குத்தான் நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 9646 பேருக்கும், செங்கல்பட்டில் 46,146 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,797 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,899 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 15,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>