தகவல் ஆணையம் மூலம் 17,000 மனுக்களுக்கு தீர்வு : ஆணையர் தகவல்

தமிழகத்தில் தகவல் ஆணையம் மூலம் 17,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.

by Balaji, Nov 21, 2020, 13:20 PM IST

தமிழ்நாடு தகவல் ஆணைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை நாகர்கோவிலில் நடந்தது.இதில் கலந்து கொண்டு மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக இது போன்ற மேல்முறையீட்டு மனு விசாரணை முகாம் நடத்தி வருகிறோம். இந்த மனுக்கள் மீது விசாரணை நடக்கும் போது வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளில் தான் தகவல் கோரி வரும் மனுக்கள் அதிகமாக இருக்கிறது. தகவல் ஆணையத்துக்கு வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரியே மனுதாரராக வந்துள்ளார். 2018 ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் 19 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருந்தது. அதில் 17,000 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது தற்போது 2 ஆயிரம் மக்கள் மட்டுமே தான் நிலுவையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க உள்ளோம். எல்லா துறையைச் சேர்ந்த மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்படும்.

இந்த விசாரணை 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மனுக்கள் விசாரணை எந்த துறைக்கு வந்துள்ளதோ அந்த துறையில் உள்ள தகவல் அதிகாரி விசாரணை நடத்துவார். அதில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் இருந்தால் மேல்முறையீடு விசாரணை நடத்தப்படும். இதிலும் தீர்வு ஏற்படவில்லை என்றால் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இதில் நேரடி விசாரணை மூலம் தீர்வு காணப்படும். இந்த விசாரணையில் உரிய முறையில் தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தகவல்களை அளிக்க 5 அவகாசம் நாட்கள் கேட்டுள்ளார்.

அதில் சரியான முறையில் தீர்வு ஏற்படவில்லை என்றால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரும் 23 ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடக்க உள்ளது. இந்தியாவிலேயே முதலுறையாக தமிழகத்தில் தகவல் ஆணையத்துக்காக புது கட்டிடம் கட்டப்பட்டு வரும் ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படவுள்ளது உள்ளது. புது அலுவலர்கள் எப்படி செயல் பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமும் நடக்கிறது. இவ்வாறு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை