பிகில் நடிகை படம் ஒடிடியில் வெளியாகிறது..

by Chandru, Nov 21, 2020, 13:30 PM IST

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே வரிசையில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் கன்னட படம் மானே நம்பர் 13. இத் திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மும்பை, நவம்பர் 20, 2020: மானே நம்பர் 13 திகிலுக்குத் தயாராகுங்கள். திகில் நிறைந்த வீட்டில் ஒரு ரோலர் - கோஸ்டர் பயணத்துக்கு உங்களை வரவேற்கிறோம். டேனிஷ் சேட் நடித்த கன்னட நகைச்சுவை திரைப்படமான ஃப்ரெஞ்ச் பிரியாணி மற்றும் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் நடித்த குடும்ப திரைப்படமான பீமசேனா நளமஹாராஜா ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மர்மம் நிறைந்த கன்னட திகில் திரைப்படமான மானே நம்பர் 13-க்கு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க அமேசாம் ப்ரைம் வீடியோ தயாராகிவிட்டது.

இந்த பயமுறுத்தும் திரைப்படத்தின் ஒரு நிமிட டீஸர் வீடியோவை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் திகில், மர்மம் மற்றும் பயம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்துக்கு இந்த டீஸர் அழைத்துச் செல்கிறது.மானே எண் 13-ல் சிக்கியுள்ள ஐந்து நெருங்கிய நண்பர்கள், அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய்களின் ஆத்மாக்கள் நிறைந்திருக்கும் திகில் வீட்டிலிருந்து வெளியேறப் போராடும் போது, என்ன நடக்கும் என்பதைக் கண்டுபிடிக்கத் தயாராகுங்கள்.

விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள் அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மானே நம்பர் 13-ஐ வரும் நவம்பர் 26ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

டீஸரை இங்கே காணலாம்...

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை