பயணிகளுக்கு கொரோனா... ஏர் இந்தியாவுக்கு 5வது முறையாக தடைவிதித்த ஹாங்காங்

by Nishanth, Nov 21, 2020, 13:18 PM IST

பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சர்வீஸ்கள் இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பெரும்பாலான நாடுகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்களை இயக்கி வருகிறது. அதுவும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் பயணிகளிடம் அதிகபட்சமாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். இந்த நெகட்டிவ் சான்றிதழ் இருந்தாலும் பல நாடுகள் அங்குச் சென்ற பின்னர் மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சென்ற சில பயணிகளுக்கு அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து நடத்திய பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 18 முதல் அந்த மாதம் 31ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்தது. ஆனால் அதன் பின்னரும் பலமுறை ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3 வரையிலும், பின்னர் அக்டோபர் 17 முதல் 30 வரையும், 4வது முறையாக அக்டோபர் 28 முதல் நவம்பர் 10 வரையும் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சில பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று (20ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதிப்பது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பயணிகளுக்கு கொரோனா... ஏர் இந்தியாவுக்கு 5வது முறையாக தடைவிதித்த ஹாங்காங் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை