ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?.. நிவர் புயலுக்கு கவிதை வாசித்த வைரமுத்து!

by Sasitharan, Nov 25, 2020, 12:22 PM IST

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. முதல் 130கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும். சில பகுதிகளில் 140 கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம். நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

புயலால் தமிழக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போ புயலே
போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?

என்று அந்த தொகுப்பு முடிகிறது.

You'r reading ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?.. நிவர் புயலுக்கு கவிதை வாசித்த வைரமுத்து! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை